Clubs

Tamil Mandram

விருது வாக்கு :

“கற்க! நிற்க!”

கற்க வேண்டியவற்றை ஐயந்திரிபற கற்று தான் கற்ற கல்விக்கேற்ப நல்லொழுக்கங்களுடன் நடந்து கொள்க.

நோக்கம்:

மொழியின்றி இனமில்லை. நமக்கென்று ஓர் தனித்த அடையாளத்தைத் தேடித் தருவதுதான் தாய்மொழியின் சிரப்பு. மானுட சமுத்திரத்தில் நாம் அடையாளம் இழந்துவிட்டால் நமக்கென்று தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவதுதான் நாம் பேசும் நல்ல தமிழ் என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். “எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைந்தோ மில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்”.

எதிர்கால மன்ற நிகழ்வுகள்:

  • 1. தமிழ் உயர்தனிச் செம்மொழி (கலந்துரையாடல்).
  • 2. (மாணவர்கள்) ஏதேனும் ஒரு தலைப்பில் பட்டிமன்றம்.
  • 3. தமிழ் பெருநாவலர்கள் பலரின் பிறந்தநாட்களை கணக்கிட்டு அவர்களின் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்புகளை கூறுதல்.
  • 4. தமிழ் திருவிழாக்கள் பற்றிய வரலாற்று பின்னணியை கூறல்.
  • 5. ஒவ்வொரு மன்ற அமர்விலும் திருக்குறளை கூறி விளக்கம் அளித்தல்.

Top